Categories: CINEMA

என்னது மனோபாலா இத்தனை திரைப்படங்களை இயக்கியிருக்காரா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக பலருக்கும் தெரிந்த மனோபாலா இயக்கிய திரைப்படங்கள் குறித்து தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் ஒரு சிறந்த நடிகராக நமக்கு பரிச்சயமானவர்தான் மனோபாலா. அவரின் மறைவு செய்தி இன்றளவும் பல ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றி வந்தவர் மனோபாலா. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த அசத்தியிருக்கின்றார்.

ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். அவர் இயக்கிய திரைப்படங்களைப் பற்றி தான் நாம் எதிர்பார்க்கப் போகிறோம். முதன்முதலாக பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ஆகாயகங்கை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

ஆகாய கங்கை அதைத்தொடர்ந்து மைக் மோகன் மற்றும் நளினி ராதிகா ஆகியோரை வைத்து நான் உங்கள் ரசிகன் என்ற திரைப்படத்தையும் பின்னர் மீண்டும் மைக் மோகன் ராதிகாவை வைத்து பிள்ளைநிலா என்ற திரைப்படத்தின் இயக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு பாரு பாரு பட்டணம் பாரு என்ற திரைப்படத்தை மீண்டும் மைக் மோகன் அவர்களை வைத்து இயக்கியிருந்தார்.

அதைத்தொடர்ந்து டிசம்பர் 31 என்ற கன்னட திரைப்படத்தை இயக்கியிருந்தார். பிறகு தமிழில் விஜயகாந்த் அவர்களை வைத்து 1987 ஆம் ஆண்டு சிறை பறவை, கார்த்தி மற்றும் சுகாசினி அவர்களை வைத்து 1987 ஆம் ஆண்டு தூரத்து பச்சை, பின்னர் 1987 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் ஊர்காவலன், 1988 ஆம் ஆண்டு சுட்டி பூனை, 1989 ஆம் ஆண்டு எம் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு பிரபு அவர்களை வைத்து மூடு மந்திரம், 1989 ஆம் ஆண்டு மீண்டும் மைக் மோகன் வைத்து தென்றல் சுடும் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  அடுத்ததாக 1990 ஆம் ஆண்டு ஹிந்தியில் கால் பதித்த மனோபாலா மேரா படி சிப் மெரா ஹை என்ற  திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

பிறகு 1990 ஆம் ஆண்டு மல்லுவேட்டி மைனர், 1991 ஆம் ஆண்டு வெற்றிப்படிகள், 1991 ஆம் ஆண்டு மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், 1992 ஆம் ஆண்டு செண்பகத் தோட்டம், 1993 ஆம் ஆண்டு முற்றுகை, பின்னர் அதே ஆண்டு கருப்பு வெள்ளை, பாரம்பரியம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். 1997 ஆம் ஆண்டு நந்தினி 2000 ஆண்டு அன்னை கடைசியாக 2002 ஆம் ஆண்டு நைனா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

40 திரைப்படங்களுக்கு மேல் இயக்கி இருக்கும் இவர் 16 தொலைக்காட்சி தொடர்களையும் மூன்று தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கி இருக்கின்றார். இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக தன்னுடைய 69 வது வயதில் கடந்த வருடம் மே மூன்றாம் தேதி உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகில் இருப்பவர்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

10 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

3 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago