சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரே வேடத்தில் நடித்துள்ள சிவக்குமார், சூர்யா, கார்த்திக் புகைப்படம்… நீங்களே பாருங்க…

நடிகர் சிவகுமார், கார்த்திக், சூர்யா மூவரும் முருகன் வேடத்தில் அவர் அவருடைய திரைப்படங்களில் நடித்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘காக்கும் கரங்கள்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். ‘தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன்’ என அனைவராலும் புகழப்படுபவர். 1970களில் ஹீரோவாக கலக்கியவர். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல மேடை நாடகங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். சிவாஜி கணேசனின் செல்லப்பிள்ளை எனவும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

இவருடைய நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து இவர் லட்சுமி குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சூர்யா, கார்த்திக், பிருந்தா மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  இவர்களில் மூத்த மகனான சூர்யா பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. இவர் ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தற்பொழுது வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இளைய மகனான கார்த்தி ‘பருத்திவீரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்பொழுது இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவருக்கு பிருந்தா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் ஒரு பின்னணி பாடகி ஆவார்.

இந்நிலையில் சிவக்குமார், கார்த்தி, சூர்யா மூவரும் ஒரே வேடத்தில் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். அதாவது அவரவர் நடித்த படங்களில் முருகன் வேடத்தில் நடித்துள்ளார்கள். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….