Categories: CINEMA

2023-ல் YOU TUBE-ல் பட்டையை கிளப்பிய 10 பாடல்கள்.. அதிகப்படியான இடத்தை பிடித்த தளபதி விஜயின் பாடல்கள்..

தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், பல படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. பல படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. அதேப் போல் பல பாடல்கள் ரசிகர்களின் மனதை வென்றது எனலாம். அந்த வகையில் யூடியூபில் அதிக வியூஸ்களை அள்ளிய பாடல்களை தற்போது நாம் பார்க்கலாம்..

1. வாரிசு – ரஞ்சிதமே :

வருடா வருடம் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலேனும் ஹிட் அடிப்பது சமீப காலத்தில் வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி இந்தாண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியான வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தமன் இசையில் விஜய் மற்றும் மானசி குரலில் உருவான இந்த இசை யூடியூப்பில் லிரிக் வீடியோவாக 224 மில்லியனும், பாடல் வீடியோ 148 மில்லியனும், மொத்தம் 372 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி உள்ளது.

#image_title

2. ஜெயிலர் – காவாலா :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் படத்தில் இடம் பெற்றிருந்த காவாலா பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் அமைந்திருந்தது. அனிரூத் இசையில் ஷில்பா ராவ் பாடியிருந்த இந்தப் பாடல், லிரிக் வீடியோவாக 228 மில்லியனும், பாடல் வீடியோவாக 138 மில்லியனும் என 366 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வருகிறது.

#image_title

3. லியோ – நா ரெடிதான் :

கடந்த அக்டோபர் மாதம் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான லியோ படத்தில் இடம் பெற்றிருந்த நா ரெடி தான் பாடல் இளைஞர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அனிரூத் இசையில் அனிரூத், விஜய், அசல் கோலார், ஆகியோர் குரலில் வெளியான இந்தப் பாடல், லிரிக் வீடியோ 202 மில்லியன், பாடல் வீடியோ 37 மில்லியன், என
மொத்தம் 239 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

4. வாரிசு – ஜிமிக்கி பொண்ணு :

வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜிமிக்கி பொண்ணு பாடல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற்றது. தமன் இசையில் ரெஞ்ஜித் உன்னி மற்றும் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் குரலில் வெளியான இந்தப் பாடல், முழு வீடியோ பாடல், 2 நிமிட வீடியோ பாடல், ஆடியோ மட்டும் என மொத்தம் 185 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

5. வாத்தி – வா வாத்தி :

இந்தாண்டு பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வா வாத்தி பாடல் காதலர்களின் வரவேற்பை பெற்றது. ஸ்வேதா மோகன், தனுஷ் ஆகியோரது குரலில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இந்தப் பாடல் யூடியூபில் லிரிக் வீடியோ, பாடல் வீடியோ என மொத்தம் 166 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

6. ஜெயிலர் – Hukum :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்த மற்றொரு மாஸ் பாடலான ஹூக்கும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. அனிரூத் இசையில் அனிரூத் மற்றும் சூப்பர் சுப்பு குரலில் வெளியான இந்தப் பாடல் யூடியூபில் லிரிக் வீடியோ, பாடல் வீடியோ என மொத்தம் 122 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

#image_title

7. வாரிசு – தீ தளபதி :

ஜெயிலர் படத்திலிருந்து ஹூக்கும் பாடல் போன்று வாரிசு படத்தில் இடம்பெற்றிருந்த தீ தளபதி பாடலும் இளைஞர்களுகு டானிக்காக அமைந்தது. தமிழில் இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் யூடியூப்பில், சிலம்பரசனின் வீடியோ, பாடல் வீடியோ என மொத்தம் 121 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

8. விடுதலை – காட்டுமல்லி :

அதிக சத்தங்களுக்கு மத்தியில் இதமான ஒரு காதல் பாட்டாக வெளியானது விடுதலை படத்திலிருந்து காட்டுமல்லி பாடல். இசையமைப்பாளர் இளையராஜா இசையில், அனன்யா பட் மற்றும் இளையராஜா குரலில் வெளியான இப்பாடல், லிரிக் வீடியோ, பாடல் வீடியோ என மொத்தம் 102 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

#image_title

9. துணிவு – சில்லா சில்லா :

இந்த வருடத்தில் அஜித்தின் ஒரே ஒரு வைரல் பாடல் என்றால் அது துணிவு படத்தில் இருந்து வெளியான சில்லா சில்லா பாடல். ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் வெளியான இப்பாடல், லிரிக் வீடியோ, பாடல் வீடியோ என மொத்தம் 91 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்து வருகிறது.

10. லியோ – Bad-ass :

லியோ படத்தில் இருந்து வெளியான Bad-ass பாடலும் இணையத்தில் வைரலானது. அனிரூத் இசையில் உருவான இப்பாடல், லிரிக் வீடியோவாக 64 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

Archana
Archana

Recent Posts

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

38 mins ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

1 hour ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

2 hours ago

அவள வெளியுலகம் தெரியாம வளர்த்துட்டேன்.. அவ திரும்பி வீட்டுக்கு வந்ததும்.. மகள் செய்த தவறு குறித்து மனம் திறந்த ராஜ்கிரண்..!

ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத…

2 hours ago

சொந்த அண்ணனுக்கு உதவி செய்யவில்லையா மணிரத்னம்?.. தயாரிப்பாளர் ஜி வி தற்கொலை பற்றி பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். ஆனால் இவர் தயாரித்த…

3 hours ago

என்ன பாரு சன் பாத்தா..! பால்கனியில் ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்திய விஜே பார்வதி.. வைரல் போட்டோஷூட்..!

தமிழ் சினிமாவில் சோசியல் மீடியா மூலமாக பிரபலமான நபர்களில் விஜே பார்வதியும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை…

3 hours ago