Categories: CINEMA

நடிகர் விவேக் கடந்த வந்த பாதைகள்… பிறப்பு முதல் இ.ற.ப்.பு வரை என்னென்ன வேலைகள் செய்துள்ளார் தெரியுமா?

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.

நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.

பாளையத்து அம்மன், லவ்லி, அள்ளித்தந்த வானம், யூத், காதல் சடுகுடு, விசில், காதல் கிசு கிசு, பேரழகன், சாமி, திருமலை போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

ஆம் திரைப்படத்தின் வாயிலாக நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை பின்பற்றினார்.

தான் நடித்த படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூடநம்பிக்கை என சமூகத்தில் அவ்வப்போது அரங்கேறும் நிகழ்வுகளை கருப்பொருளாக வைத்து தனது சிந்தனைக் கருத்துக்களை கொமடியாக வெளிக்கொண்டு வந்தார்.

“சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும்.

தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த சின்னக்கலைவாணர் அவர்கள், பிறகு அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றதோடு, அதே துறையில் எம் காம் முதுகலை பட்டமும் பெற்றதோடு, மதுரையில் சிறிது காலம் தொலைப்பேசி ஆபரேட்டராக வேலை செய்தார்.

பின்பு சென்னைக்கு சென்ற அவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜுனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்துள்ளார்.

1987ம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாத்துறையில் கால்பதித்த இவர், அத்திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பின்பு, 1989ம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செ.த்.தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

பின்பு பல திரைப்படங்களில் கொமடியை மட்டுமின்றி சமூக கருத்துக்களையும் வைத்து தனது தனிப்பட்ட சிந்தனையை கொமடியாக கொண்டுவந்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து அவர்களது மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைத்துள்ளனர்.

தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக், ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம் தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்தார்.

காமெடி நடிகராக மட்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் விவேக் முத்திரை பதித்திருக்கிறார். அதேபோல், கதையின் நாயகனாகவும் வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் விவேக்கின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது.

திரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Archana
Archana

Recent Posts

அந்த மனசு தான் சார் கடவுள்.. 10 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…

9 mins ago

‘காதல்’ படத்தால் என் வாழ்க்கையில் நான் இதையெல்லாம் இழந்துவிட்டேன்… நடிகை சந்தியா பகிர்ந்த தகவல்!

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…

32 mins ago

என் வீட்ட 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணேன்.. திருமண நாளை முன்னிட்டு பாடகி சின்மயி கணவர் வெளியிட்ட பதிவு..!

சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில்…

42 mins ago

கண்ணதாசனை என்னால் வெல்ல முடியாது… ஆனால் அவருக்கு என்ன நிரூபிக்கணும்னு எழுதிய பாட்டு அது- வைரமுத்து பெருமிதம்

இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு…

1 hour ago

குஷ்பு மற்றும் சிம்ரனை வைத்து பெரிய சம்பவம் பண்ண சுந்தர் சி.. எப்படி ஆடுறாங்க பாருங்க.. வைரலாகும் மேக்கிங் வீடியோ..!

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…

1 hour ago

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago