Categories: CINEMA

அடேடே சூப்பர்…. மீண்டும் படத்தில் நடிக்க தயாரான மீனா….. அதுவும் பிரபல நடிகருடன்….. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் இழப்பிலிருந்து மீனா தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.

இதனிடையே ஜீத்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா ஜோடியாக நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மலையாள திரைப்படம் தான் திரிஷ்யம்.இந்தத் திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்று அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாகம் 2 கடந்த 2011 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியானது.

இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அதற்கானஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தில் மோகன்லால் ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றன.

admin

Recent Posts

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

2 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

3 hours ago

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் நடிகை.. இவர் தான் ஹீரோவா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிகை அக்ஷயா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் அக்ஷயா மகா…

3 hours ago

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…

4 hours ago

இந்தியாவுல மட்டுமில்ல உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…

5 hours ago

வந்த வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல்.. புதிய சீரியலில் கம்மிட்டான ரேஷ்மா.. யாருக்கு ஜோடியா தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன்…

5 hours ago