Categories: CINEMA

தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர் இவர் தான்..! பலரும் அறியாத சுவாரசிய தகவல் இதோ..

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி, சுஹாசினி, ரேவதி மற்றும் தற்போதைய சுதா கொங்கரா வரை பல பெண்கலைஞர்கள் சாதித்திருந்தாலும் அவர்களின் பங்களிப்பு இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனராக இத்துறையில் கால்பதித்தவர் நடிகை டி பி ராஜலட்சுமி ஆவார். சினிமா ராணி என்ற பட்டத்தோடு நடிப்பில் முன்னணியில் இருந்த இவர் 1936 ஆம் ஆண்டு வெளியான ’மிஸ் கமலா’ என்ற படத்த இயக்கியதன் மூலம் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குனர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

டி பி ராஜலட்சுமியின் சொந்த வாழ்க்கை பல கஷ்டங்களால் நிறைந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாலியமங்கலம் எனும் ஊரில் பிறந்த அவருக்கு 11 வயதிலேயே குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் அவர்களின் குடும்பத்தால் ஒப்பந்தப்படி வரதட்சணை தரமுடியவில்லை என்பதால் அவர் பெற்றோர் வீட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.

#image_title

குழந்தைப் பருவம் முதலே பாட்டு மற்றும் நடிப்பு திறமை இருந்ததால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். சங்கர தாஸ் சுவாமிகளின் நாடகக்குழுவில் இணைந்த அவர் பல மேடை நாடகங்களில் நடித்த பின்னர் தமிழ் சினிமாவுக்குள் காலடி வைத்தார்.

பின்னர் தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய சக நடிகரான டி வி சுந்தரத்தை மணந்துகொண்ட அவருக்கு 1936 ஆம் ஆண்டு கமலா என்ற பெண் குழந்தை பிறந்தது. அந்த ஆண்டுதான் அவர் இயக்கிய மிஸ் கமலா படமும் உருவானது. தன் குழந்தையின் பெயரால்தான் அந்த படத்துக்கும் அவர் மிஸ் கமலா என்ற பெயர் சூட்டினார். அந்த படமும் வலிமையான பெண் கதாபாத்திரத்தைக் கொண்ட பெண்ணிய படமாக உருவானது. ஆனால் இப்போது அந்த படம் காணக் கிடைக்கவில்லை.

#image_title

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் கடைசியாக 1950 ஆம் ஆண்டு வெளியான இதய கீதம் எனும் திரைப்படத்தில் நடித்தார். 1964 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார்.

vinoth

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

5 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

5 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

6 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

11 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

12 மணி நேரங்கள் ago