Categories: CINEMA

WOW.. இவுங்கள இப்டி பாத்து எவ்ளோ நாள் ஆச்சி… சூர்யா & ஜோதிகாவின் லேட்டஸ்ட் வீடியோ.. வைரல்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைய பல  மொழிகளிலும் ஜோதிகாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் கடந்த 2015ல் வெளியான  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதை தொடர்ந்து கடைசியாக அவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்பொழுது மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோடியாக நடிகை ஜோதிகா ‘காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜோதிகா இந்தி படத்தில் நடித்துள்ளார். விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ஷைத்தான் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீசாகி வைரலானது.

டும் டும், பிரியமான தோழி மற்றும் சில படங்களுக்கு பிறகு, பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் மாதவன் ஜோதிகாவை ஷைத்தான் படத்தில்  பார்ப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தி மொழியில் உருவான “வாஷ்” என்ற படத்தின் ரீமேக்காக சைத்தான் திரைப்படம் உருவாகியுள்ளது. பில்லி, சூனியம் என்று சொல்லப்படும் பிளாக் மேஜிக் ஹாரர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இந்த படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இதுவரை மாதவன் ஏற்று நடித்திராத ஒரு புதிய அலறவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகை ஜோதிகா நடித்துள்ள பாலிவுட் படமான ‘சைத்தான்’ திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. நேற்று இந்த படத்தின் ஸ்கிரீனிங் மும்பையில் நடந்தது. இதில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா இருவரும் செம ஸ்டைலாக கலந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

22 mins ago

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

48 mins ago

தனுஷ் பட நடிகை சாயா சிங் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது…

2 hours ago

என்ன வரு டேட்டிங்கா..! வருங்கால கணவருடன் சுற்றி திரியும் வரலட்சுமி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்…

3 hours ago

அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது.. ஆவேசத்துடன் GV பிரகாஷ் வெளியிட்ட பதிவு.. வைரல் பதிவு..!

இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…

4 hours ago

ஷூட்டிங் லேட்டா போனா எம் ஜி ஆரை சமாளிக்குறது ஈசி.. ஆனா சிவாஜிகிட்ட கஷ்டம்.. ஜாலியான அனுபவத்தைப் பகிர்ந்த நாகேஷ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

4 hours ago