Categories: CINEMA

டயானா மரியம் குரியன் நயன்தாராவாக மாறியது எப்படி..? பெயரின் ரகசியத்தை பகிர்ந்த லேடி சூப்பர் ஸ்டார்.. வைரலாகும்வீடியோ..!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பொதுவாக திரையுலகில் ஹீரோயின்கள் திருமணம் ஆகிவிட்டால் படங்களில் நடிப்பது அரிது. திருமணம், வயது, அழகு உள்ளிட்ட பல காரணங்களால் ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. அப்படியும் கிடைத்தால் அக்கா, அம்மா போன்ற துணை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நயன்தாரா. தமிழ் திரையுலகில் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் படம் பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. ஹீரோயின்களை மையப்படுத்தி வெளியான ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம் போன்ற படங்களிலும் நடித்து நயன்தாரா அசத்தினார்.

 

இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன். தனது பெயரை மாற்றியது ஏன் என்பது குறித்து நயன்தாரா ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நயன்தாரா கூறியதாவது, தன்னை மலையாளத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் சத்யம் அந்திகாட். அவர் முதலில் என் பெயரை மாற்ற வேண்டும் என கூறினார். அப்போது எதுவும் தெரியாது என்பதால் சரி எனக் கூறினேன். ரொம்ப நாள் அவர் எனக்கும் பெயர் வைக்கவில்லை.

எனது படத்திற்கும் பெயர் வைக்கவில்லை. ஒரு நாள் நானே அவரிடம் சென்று பெயர் வைக்கிறீர்களா? இல்லையா என கேட்டேன். அதற்காக 30 பெயர் லிஸ்ட் போட்டு எனது கையில் கொடுத்தார். அதில் எனக்கு நயன்தாரா என்று பெயர் தான் பிடித்திருந்தது. அதை அவரிடம் கூறினேன். அவரும் இந்த பெயர்தான் வைக்க நினைத்திருந்தேன் என தெரிவித்தார். அப்படி வந்த பெயர் தான் நயன்தாரா என கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Priya Ram
Priya Ram

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

4 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

4 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

5 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

5 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

6 hours ago