Categories: CINEMA

இந்திய விமானப்படை அதிகாரி to சினிமா நடிகர்.. அதிகாரி பணியை விட்டுட்டு நடிக்க வருவதற்கு இது தான் காரணமா..? மனம் திறக்கும் டெல்லி கணேஷ்..

நடிகர் டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். அவர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எனக்கு இறைவன் அருளால் எல்லாமே தேடி வந்தது. ஏர்போர்ஸ் வேலையும் கூட அப்படித்தான். மதுரையில் நான் டிவிஎஸ் கம்பெனியில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போது எம்ப்ளாயின்ட்மென்ட் ஆபிசில் பதிவு செய்து வைத்திருந்தேன்.விமானப்படை ஆள் சேர்ப்புக்கான தேர்வில் எல்லாவற்றையும் பாஸ் செய்துவிட்டேன். தாம்பரம் ஆபீஸ் வந்தேன். அன்றே என்னை பெங்களூருவுக்கு அனுப்பி விட்டனர். அங்கு டிரெயினிங் முடித்து என்னை டெல்லி அனுப்பினர். நான் அங்கே இருந்த போதுதான் இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்தது.

அப்போது அந்த போரில் கை போன, கால் போன உடம்பு முழுவதும் காயம்பட்ட பல இந்திய ஜவான்களை, டெல்லிக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு டெல்லியில் சிகிச்சை தரப்பட்டது. அப்போது ரேடியோ தவிர வேற பொழுதுபோக்கு இல்லை. ஆர்மி, ஏர்போர்ஸ், நேவி, மூனு பேரும் சேர்ந்து, அவர்களுக்காக ஏதாவது பொழுதுபோக்கு நிகழ்ச்சி செய்யட்டும் என முடிவு செய்யப்பட்டது. மொழி அவர்களுக்கு பிரச்னை இல்லை. ஏதாவது ஒன்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விதமாக இருக்க வேண்டும் என முடிவானது.


என்னை நடிக்க சொல்லி வற்புறுத்தினர். நான் நடித்த போது டயலாக்கை மறந்துவிட ஒருவர் என்னை அடிக்க நான் சிரித்துக்கொண்டே இருப்பேன். அது எல்லோருக்கும் பிடித்துப்போய் பாராட்டினர். இதுதான் இயல்பான நடிப்பு என்று என்னை வாழ்த்தினர். சிலர் உனக்கு நடிப்பு நன்றாக வருகிறது. விட்டுவிடாதே என்றனர். தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட நாடகங்களில் நான் நடித்தேன். பொங்கல், கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகை என்றாலும் நாடகம் போடுவோம்.

எல்லா டிராமாவிலும் நான்தான் ஹீரோ. ஒரு கட்டத்தில் இந்த ஏர்போர்ஸ் குறித்து வெறுப்பாகி விட்டது. எனக்கு நாடகத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டதால், அந்த வேலை வேண்டாம் என எழுதி தந்துவிட்டு வந்துவிட்டேன். பிறகு பல நாடகங்களில் நடித்து பின் சினிமாவில் நடித்து பிரபலமானேன் என்று கூறியிருக்கிறார் டெல்லி கணேஷ்.

Sumathi
Sumathi

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

4 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

4 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

5 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

10 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

11 மணி நேரங்கள் ago