நடிகர் அஜீத்குமார், ஆச்சி என தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் மனோரமாவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். தனிப்பட்ட முறையிலும், அவர் மீது அதிக பாசம் கொண்டவர் அஜீத்குமார். ஆச்சி மனோரமாவும் அஜீத் மீது பிள்ளை பாசத்தை வெளிப்படுத்துவார். அதனால் எங்கு பொது நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சியில் பார்த்தாலும் ஆச்சி மனோரமாவிடம் சென்று அன்பு ததும்ப பேசிவிட்டு வருவதுதான் அஜீத்குமாரின் வழக்கம்.
இந்நிலையில் முதுமை காரணமாக ஆச்சி மனோரமா இறந்தார். அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த நடிகர் அஜீத்குமார், தனது மனைவி ஷாலினியுடன் மனோரமாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது, முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததால், அஜீத்குமார் கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு, தரையில் ஊன்றியபடி மிகவும் சிரமத்துடன் அங்கு சென்றிருந்தார். அப்போது மனோரமா வீட்டருகே இருந்த ரசிகர் கூட்டம், அஜீத்குமார் அருகே வர முண்டியடித்து, திரண்டு வந்த கூட்டத்தில் ஷாலினியுடன் சிக்கிக்கொண்டார் அஜீத்குமார்.
அங்கிருந்த சுரேஷ் சந்திரன்தான், அஜீத்குமாரை அந்த பெருங்கூட்டத்தில் இருந்து காப்பாற்றி, பாதுகாத்து பத்திரமாக அஜீத்குமாரை, ஷாலினியை காரில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார். இதில் அவரது சண்டை கிழிந்து, மண் தரையில் விழுந்து பலவிதமான சிரமங்களை சந்தித்திருக்கிறார். இந்த தகவலை கூறிய வலைப்பேச்சு அந்தணன், அதன்பிறகுதான் சினிமா துறையினர், நெருக்கமானவர் என எந்த இறப்பு நிகழ்ச்சியிலும், பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என்ற முடிவுக்கு அஜீத்குமார் வந்தார் என, அந்த நேர்காணலில் அந்தணன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…