Categories: NEWS

ம ர ண த்தின் விளிம்பிற்கு சென்று உயிர் பிழைத்த அருண்பாண்டியன்..! என்ன நடந்தது..? ஒரு இரவில் நடந்த சோகம்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்னுடைய அப்பாவுக்கு நடந்த சிகிச்சைகள் குறித்தும், தாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் அவரது மகள் கீர்த்தி பாண்டியன்.

கொரோனாவின் 2வது அலை கோரத்தாண்டம் ஆடி வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தன்னுடைய தந்தையின் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன்.

அதில், ஒரு நாள் இரவு அப்பா லேசான நெஞ்சு வலி, தூங்க முடியவில்லை என்று சொன்னார். அவரை அவசரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றார். அடுத்த நாள் அப்பாவுக்குக் கொரோனா தொற்று உறுதியானது.

எனவே திருநெல்வேலியில் வீட்டுத் தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் 7 நாட்களும் மருத்துவ உதவிகள் கொடுத்து நாங்களே கவனித்துக் கொண்டோம்.

எனினும் அப்பாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், அதிகம் பயந்து விட்டோம், அவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அதிகளவு பாதிப்பில்லை என்றார்கள்.

கொரோனா சரியானதும் இதயப் பிரச்சனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றோம், அங்கு பரிசோதித்த போது தான், இதயத்தில் அடைப்பு இருந்ததும், 90 சதவீதம் தீவிரமடைந்து இருப்பதும் தெரியவந்தது.

எனவே அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோப்ளாஸ்டி செய்யப்பட்டது. கொரோனாவிலிருந்து அப்போதுதான் மீண்டிருந்தாலும் அப்பா செய்துகொள்ளத் தயாராக, வலிமையுடன் இருந்தார்.

2.5 மணி நேர முடிந்த பின்பு அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். அடுத்த 24 மணிநேரம் தீவிர பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த தொற்று காலத்தில் கூடுதலாக இந்த விஷயமும் சேர்ந்துகொண்டது எங்களுக்கு அதிக மனச்சோர்வைத் தந்தது. முன்னெச்சரிக்கையாக, நாங்கள் அனைவரும் அப்பாவைச் சுற்றி இருக்க முடியாத சூழல். அவரோடு பக்கத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் சமூக விலகலைப் பின்பற்றினோம்.

மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இப்போது என் சூப்பர்ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார்.

அப்பா, மனரீதியாக மிகவும் உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ சரியில்லை என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது. நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம்.

அறிகுறிகள் தென்படும்போது அதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். சிறிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை என்பது மிக முக்கியம்.

தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Archana
Archana

Recent Posts

இளையராஜாவைப் பார்த்து ‘நீ அதிர்ஷ்டக்காரன்டா’ என சொன்ன கண்ணதாசன்… அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமான காரணமா?

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…

4 mins ago

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

1 hour ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

2 hours ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

13 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

15 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

15 hours ago