தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன் உள்ளிட்டார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வரும் காட்சியை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆனது. இரண்டாவது பாடலும் நாளை வெளியாக உள்ளது.
அந்த பாடலில் விஜய்யும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகி பவதாரணியும் பாடுவது போல உருவாக்கியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக செய்திகள் உலா வந்தது. ஆனால் கோட் படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளின் சாட்டிலைட் உரிமையை ஜி தொலைக்காட்சி தான் வாங்கி உள்ளதாம்.
சுமார் 75 கோடி ரூபாய் கொடுத்து அர்ச்சனா கல்பாத்தி சாட்டிலைட் உரிமையை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அதில் ஒரு கண்டிஷன் உள்ளதாம். முதலில் ஒரு குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகை கொடுத்துவிட்டு 16 தவணைகளாக மொத்த பணத்தையும் கொடுக்க உள்ளதாக ஜீ தொலைக்காட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனத்தினர் அப்செட்டில் உள்ளார்களாம்.