பெண் பார்க்க தினமும் அலங்காரம்.. வந்து வந்து சென்ற மாப்பிள்ளைகள்.. திருமணமாகாத ஏக்கத்தில் 25 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜ் மதி என்ற 25 வயது இளம் பெண் கடந்த சில வருடங்களாக திருப்பூரில் உள்ள வித்யாலயம் அடுத்த பாரதி நகரில் வசித்துக்கொண்டு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் அடிக்கடி பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து சென்றனர். மாப்பிள்ளை வீட்டார் வரும்போது ராஜ்மதி தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருப்பார். அவர்களும் பெண்ணை பார்த்துவிட்டு செல்வார்கள். பிறகு சம்மதம் சொல்வார்கள் என்று வலி மேல் விழி வைத்து ராஜ் மதி காத்திருந்த நிலையில் காத்திருந்து காத்திருந்து காலம் கடந்ததே தவிர அவரை கைப்பிடிக்க யாருமே முன்வரவில்லை.

இப்படி ஒவ்வொரு முறை பெண் பார்க்க வருவதும் பிறகு மாப்பிள்ளையின் பதிலுக்காக ராஜ் மதியை காத்திருப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. தன் வயதுள்ள பெண்கள் அனைவரும் குழந்தை மற்றும் கணவருடன் செல்வது ராஜ்மதிக்கு பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு ஒருவர் கூட வாழ்க்கைத் துணையாக வரவில்லையே என்று ராஜ்மதி மன வேதனையில் இருந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.