குஜராத் மாநிலம் வடோதரா நகரின் தண்டல்ஜா பகுதிக்குட்பட்ட சாலையில், மூன்று இளம் பெண்கள் ஒரே ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது மழை பெய்து ஈரமாக இருந்த சாலையில் வாகனம் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி கீழே விழுந்தது. அந்நேரத்தில் அதே பாதையில் வந்துகொண்டிருந்த ரோட் ரோலர் வாகனம், கீழே விழுந்தவர்களில் 19 வயதுடைய ஒரு இளம் பெண்ணின் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
https://twitter.com/HateDetectors/status/2084180630867456410
உடன் பயணித்த மற்ற இரு பெண்களும் அதிர்ஷ்டவசமாகக் குறைந்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்து தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், விபத்து நடந்த விதம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
