‘கருத்து சொல்லலாம் ஆனால் அதையே வேலையா வைச்சுக்க கூடாது’!….விக்ரமனை மறைமுகமாக தாக்கிய மைனா நந்தினி!… வெளியான முதல் ப்ரோமோ இதோ!…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

   

80 நாட்களை கடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது பிக் பாஸ் சீசன் 6. இந்நிலையில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இவர்களை பார்த்ததும் போட்டியாளர்கள் கண்கலங்கிய தருணங்கள் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து எமோஷனல் எபிசோட்டாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு வந்தது.

இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் தற்பொழுது ஒரு டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் மைனா நந்தினி பேசும்பொழுது ‘ஒப்பீனியன் வைக்க தான் வேண்டும்.

ஒப்பீனியன் வைக்கிறதை மட்டும் வேலையா வச்சிருக்கக் கூடாது’ என்று கூறுகின்றார்.  இதனால் விக்ரமனுக்கும் மைனா நந்தினிக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இவ்வாறு இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…