அடடே.. இவர்கள்தான் நடிகை ஜோதிகாவின் அம்மா அப்பாவா?… இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

நடிகை ஜோதிகா தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் இரண்டு பிள்ளைகள் இருப்பது நாம் அறிந்த ஒன்றே. இதை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கதாநாயகிகளுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.

   

திருமணத்திலிருந்து சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா 2015ல்  வெளியான’ 36 வயதினிலே’ படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.  தற்பொழுது நடிகை ஜோதிகா முதல் முறையாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குனர் ஜோ பேபி படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்திற்கு மேத்யூ புலிகன் என்பவர் இசையமைத்து வருகிறார்.

நடிகர் மம்முட்டியின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்களால்  ஆவலுடன்  எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இப்புகைப்படம் சூர்யா – ஜோதிகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்….