திருமண வாழ்க்கை என்பது காலம் கடந்தாலும் அதே காதலுடன் இருப்பது தான். அதிலும் வயதான பிறகும் காதல் மாறாமல் ஒருவருக்கொருவர் உறுதுணையாக வாழ்வது என்பது மகிழ்ச்சியை தரும். இந்த உலகில் உறவுகள் என்பது அடிக்கடி வந்து போகும். ஆனால் காலம் கடந்தும் நம்முடன் இருப்பது நமக்கான காதல் மட்டுமே. இந்நிலையில் உலகில் வாழ்ந்து வரும் வயதான தம்பதியர் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் பெற்றுள்ளனர்.
அமெரிக்கா மியாமி சேர்ந்த 107 வயதான எலினோர் கிட்டன்ஸ் மற்றும் 108 வயது கணவர் லைல் கிட்டன்ஸ் ஆகியோர் உலகின் வயதான தம்பதி என்ற பெருமையை பெற்றுள்ளன. கடந்த 1942 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்கள் 83 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் இனிய திருமண வாழ்க்கையில் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு நாங்கள் ஒருவரை ஒருவர் இன்றுவரை காதலிக்கிறோம் என்று சிம்பிளாக சொல்லிவிட்டு சிரிக்கின்றனர். தற்போது இந்தச் செய்தி இணையத்தில் வெளியாகி இளம் தம்பதியினரை வியக்க வைக்கிறது.
