சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 24, 2026

Spread the love

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலை மாவு போன்ற உணவுப் பொருட்களை எவ்வித சுகாதாரப் பாதுகாப்பும் இன்றி, கால்களால் பிசைந்து தயாரிக்கும் இத்தகைய செயல்களால் மண்ணில் உள்ள கிருமிகள், அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் உணவில் கலந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உருவாகியுள்ளது.

உணவு என்பது வெறும் சுவைக்காக மட்டுமின்றி, சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய சுகாதாரமற்ற உணவு தயாரிப்பு முறைகளுக்கு எதிராக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.