மகளிர் உரிமைத்தொகை ரூ 2,500… அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி… பட்ஜெட்டில் காத்திருக்கும் மெகா அறிவிப்பு…!

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

மகளிர் உரிமைத் தொகையை மாதந்தோறும் ரூ 2,500 ஆக உயர்த்தி, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்து வந்த நிலையில், தற்போது கூட்டணி மற்றும் ஆதரவு நிலையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இக்கோரிக்கையைக் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பத் தலைவிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும், தற்போதைய விலைவாசி உயர்வைச் சமாளிக்கவும் இந்த நிதியுதவி உயர்வு மிகவும் அவசியம் என மக்கள் தரப்பிலும் பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையாகவும், அரசியல் கட்சிகளின் முதன்மையான கோரிக்கையாகவும் இது உருவெடுத்துள்ளதால், வரவிருக்கும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இடம் பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.