கேரள மாநிலம் திருச்சூரில் நெஞ்சு வலியால் துடித்த பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினர் அருகில் இருந்த போலி நாட்டு வைத்தியரிடம் கூட்டிச் சென்றுள்ளனர். அந்தப் போலி வைத்தியர் பெண்ணின் நெஞ்சில் குச்சியால் அடித்து, வேக மூச்சு விடுமாறு கூறி அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சித்திரவதை செய்துள்ளார். “மாலைக்குள் வலி சரியாகிவிடும்” எனக் கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டிற்குச் சென்றதும் அப்பெண் மயங்கி விழுந்ததால், பதறிய குடும்பத்தினர் அவரை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைச் பரிசோதித்த மருத்துவர்கள், “இன்னும் ஒரு மணி நேரம் தாமதித்திருந்தால் இவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது” எனக் கூறி உரியச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றினர். போலி வைத்தியரின் கொடூரச் செயலைக் கேட்டறிந்த மருத்துவர்கள், நெஞ்சு வலி போன்ற அவசர மருத்துவக் காலங்களில் இதுபோன்ற போலி வைத்தியர்களையும் மூடநம்பிக்கைகளையும் நம்பி உயிரோடு விளையாட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
