“வேடிக்கை பார்த்து வீடியோ எடுக்குறாங்க…” வீட்டை எாித்து சாம்பலாக்கிட்டாங்க…!கதறியபடி வீடியோ எடுத்த பெண்…. நடுங்க வைக்கும் சம்பவம்…!! 

By Devi Ramu on ஐப்பசி 3, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் கடீர் சௌக் எல்லைக்குட்பட்ட லபாரி கிராமத்தில், நிலத்தின் அஸ்திவாரத்தை அளவிடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினர் எதிர்தரப்பினரின் வீட்டிற்குத் தீவைத்து ஒட்டுமொத்த வீட்டையும் கொளுத்திச் சாம்பலாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று வருவாய்த்துறை அதிகாரி நிலத்தை அளவிட வந்தபோது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் பெண்களை மிகக் கொடூரமான வார்த்தைகளால் திட்டி, “பூலான் தேவி போல ஆக்கிவிடுவோம்” என பகிரங்க மிரட்டல் விடுத்து வீட்டிற்குத் தீ வைத்துள்ளனர். வீடே தீப்பற்றி எரிந்த நேரத்தில், அங்கு நின்றிருந்த வருவாய்த்துறை அதிகாரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், காவல்துறையினர் தடுத்து நிறுத்தாமல் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

   

அதிகாரிகளும் போலிஸாரும் எதிர்தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்த அநியாயத்திற்குத் துணைபோனதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு எதிராகவும் காவல்துறையின் நடவடிக்கையின்மைக்கு எதிராகவும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.