“உழைச்ச காசை கேட்டா திமிரா…?” ரேபிடோ டிரைவரிடம் காசை கொடுக்க மறுத்து அலப்பறை செய்த பெண்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

அலுவலகத்திற்குச் செல்வதற்காக ரேபிடோ பைக்கில் பயணித்த பெண் ஒருவர், சவாரி முடிந்த பிறகு ஓட்டுநருக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்தை அளிக்க மறுத்து நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் கஷ்டப்பட்டு உழைத்தற்கான நியாயமான கட்டணத்தை ரேபிடோ ஓட்டுநர் கேட்டபோது, அந்தப் பெண் பணத்தைக் கொடுக்க முடியாது என அடம்பிடித்து அவருடன் சண்டையிட்டுள்ளார். இந்தச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

   

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வர, “உழைக்கும் ஏழை டிரைவர்களை இப்படி ஏமாற்றி வஞ்சிப்பது நியாயமா?” என நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் நடத்தைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.