“பெண்ணின் முகத்தில் செருப்பால் அடித்து, முடியை பிடித்து இழுத்து…” வேலைக்கு வந்த இடத்தில் திருட்டுப் பழி சுமத்தி தாக்கிய கொடூரம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் அதிர்ச்சி வீடியோ ஒன்று, நாட்டளவில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வேலை செய்து வரும் ஏழைத் தலித் பெண் ஒருவர் மீது திருட்டுப் பழி சுமத்தி, அவரைச் செருப்பாலும் தடியாலும் கைகளாலும் மிகக் கொடூரமாகத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மனிதத்தன்மையற்ற கொடூரத் தாக்குதலைக் கண்டித்து, “ஏழைகளின் அமைதியை அவர்களின் பலவீனமாகக் கருத வேண்டாம்; சட்டத்தின் பயம் முற்றிலும் போய்விட்டதா?” என்று சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து உடனடியாகக் காவலத்துறை தீவிர விசாரணை நடத்தி, சாதிய வன்கொடுமை மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது சாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.