என்னது.. விஜய் 56 வயசுல தான் வெற்றி பெறுவாரா.. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வில்லங்க பதிவு.. கொந்தளிக்கும் தவெக தோழர்கள்..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

   

இதற்காக அவர் தொடங்கியதே ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் அரசியல் கட்சி. தற்பொழுது அவரது ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறி தளபதியின் படையாக மாற உள்ளனர். இதனை தளபதி ‘அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.’ எனத் தொடங்கி, அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்’ என கூறி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

தளபதி ரசிகர்கள் இதனை தற்பொழுது வரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். திரைபிரபலங்கள் பலரும் தளபதிக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இந்தவேளையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் அவர்களின் ட்விட்டர் பதிவு தான் தற்பொழுது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதாவது அவர் தினமலர் செய்தி நாளிதழில் இடம்பெற்ற செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அரசியல் களம் இறங்கிய நடிகர் விஜய்க்கு 2031ல் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று அவரது ஜாதகத்தை அலசிய ஜோதிடர் தெரிவித்துள்ளார்’ என்றுள்ளது. இதைப்பார்த்த தளபதி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை  கமெண்ட் பக்கத்தில் வறுத்தெடுத்து  வருகின்றனர். இதோ அந்த பதிவு…