இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ளாதது ஏன்?... மனம் திறந்த நடிகை மோனிகா... உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா?... - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ளாதது ஏன்?… மனம் திறந்த நடிகை மோனிகா… உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா?…

CINEMA

இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ளாதது ஏன்?… மனம் திறந்த நடிகை மோனிகா… உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா?…

தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். 18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இயக்குனர் பாலு மகேந்திராவால் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை மௌனிகா.

இத்திரைப்படத்திற்கு பிறகு தாலாட்டு கேக்குதம்மா, வண்ண வண்ண பூக்கள், கடைக்குட்டி சிங்கம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்பொழுது இவர் சின்னத்திரையிலும் நிம்மதி உங்கள் சாய்ஸ் 2, கலாட்டா குடும்பம், சொந்தம், ஆயுத எழுத்து,  ஆஹா கல்யாணம் என பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்பொழுது பாலு மகேந்திராவின் மறைவிற்குப் பிறகு நடிகை மௌனிகா ஏன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை பற்றி தற்பொழுது மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது பாலு மகேந்திரா இறக்கும் நேரத்தில் இரண்டு சத்தியம் கேட்டாராம். முதல் சத்தியம் நான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாராம்.

அதன்பிறகு மறுமணம் செய்ய வேண்டும் என கேட்க, உடனே மௌனிகா இதற்கு மட்டும் சத்தியம் செய்ய முடியாது என்று கூறினாராம். இவ்வாறு தனது மறுமணம் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார் நடிகை மௌனிகா.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top