இந்த வாரமும் எவிக்ஷனில் ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்.. இறுதிக்கட்டம் வரை வந்து வெளியேறப்போகும் அந்த 2 போட்டியாளர்கள் யார் தெரியுமா..?

By Nanthini on ஜனவரி 3, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது.

Ticket To Finale Task Winner Rayan : ஒரே டாஸ்கில் தலைகீழாக மாறிய ரிசல்ட்; பிக் பாஸ் முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா? - bigg boss tamil season 8 ticket to finale task winner rayan gan sphq6e

   

 

   

கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா மற்றும் ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்ற உள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பின்னாலே டாஸ்கில் ரயான் வெற்றி பெற்றதால் இந்த சீசனில் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துள்ளார்.

 

ஐ லவ் யூ பவித்ரா" காதலை சொன்ன அருண்.. அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் கூட்டம் அதிகமாக உள்ளதால் கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் தீபக், ஜாக்குலின், ரயான், ரானவ், பவித்ரா, மஞ்சரி, அருண் மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தற்போதைய நிலவரப்படி தீபக் அதிக வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஜெப்ரி மஞ்சரி இடையே வெடித்த சண்டை..! திட்டிவிட்ட ஜெப்ரி..! Bigg Boss Promo…! - தமிழ்க்ளிட்ஸ் தமிழ் செய்திகள்

அவருக்கு அடுத்ததாக ரயான் உள்ள நிலையில் அடுத்தடுத்த இடங்களில் ராணவ், ஜாக்குலின் மற்றும் விஷால் ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர்கள் இந்த வாரம் இலுமினேட் ஆக வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதேசமயம் இந்த வாரம் குறைந்த வாக்குகள் வாங்கியுள்ள போட்டியாளர்கள் மஞ்சரி, பவித்ரா மற்றும் அருண் பிரசாத். இவர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் மஞ்சரிக்கு கிடைத்துள்ளதால் இந்த வாரம் அவர் எலிமினேட் ஆவது உறுதியாகியுள்ளது. அடுத்த எமிக்ஷனில் பவித்ரா அல்லது அருண் எலிமினேட்டாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.