விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது வரை 10 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 62 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது .
ம் வாராவாரம் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதும், அவர்களுக்கு பதிலாக வைல்ட் காடு என்ட்ரி ஒரு சில சமயங்களில் நுழைவதும் நடைபெறுவது வழக்கம் தான். அந்த வகையில் கடந்த வாரம் அக்ஷயா, பிராவோ வெளியேற விஜய் வர்மா மற்றும் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக நிக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்கும் டாஸ்க் தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த ப்ரோமோவில் ஒரு இடத்தில் அனைவரும் ஒவ்வொருவராக வந்து நிற்க வேண்டும். மற்ற ஹவுஸ் மேட்ச் அவரை கேப்டனாக்க விரும்பினால் chears செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அர்ச்சனா வந்து நிற்கும்பொழுது அனைவரும் அதிகமாக அவரை chears செய்கின்றனர். இதை தொடர்ந்து சரவணன் விக்ரம் வந்து நிற்கும்பொழுது ‘ஒருத்தராவது கைதட்டுங்கடா’ என்று கெஞ்சுகிறார். ஆனால் ஒருவரும் கைதட்டவில்லை .
முடிவில் நிக்சன் அர்ச்சனாவிற்கும் ,கூல் சுரேஷ்ற்க்கும் தான் அதிகமான chears கிடைத்தது என்று கூற, அப்ப விஷ்ணுவுக்கும் மணிக்கும் எவ்வளவு வந்துச்சு? என்று ஜோவிகா கேள்வி எழுப்ப, விஷ்ணுவுக்கு தான் அதிகம் என்று நிக்ஸன் கூற, இது ஃபேவரிடிசம் கேப்டன் என்று தினேஷ் நிக்சனை வம்புக்கு இழுக்கிறார். ‘நீங்க மணின்னு சொல்லுவீங்க. இவங்க விஷ்ணு னு சொல்லுவாங்க. நான் யாரை சொல்லணும்?’ என்று நிக்சன் ஆவேசமாக தினேஷிடம் சண்டையிடுவது போல இந்த வீடியோ முடிந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…