நெடுஞ்சாலை CCTV… பாகிஸ்தானுக்கு பறந்த சிக்னல்.. இந்திய ராணுவத்தைக் காட்டிக்கொடுத்த அந்த ‘கருப்பு ஆடு’ யார்?.. பின்னணியில் இருக்கும் பகீர் நெட்வொர்க்..!!!

Spread the love

இந்திய ராணுவத்திற்கு அதிகளவில் வீரர்களை வழங்கும் பெருமைமிக்க பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தானுக்காக இந்திய ராணுவ நடமாட்டங்களை உளவு பார்த்து வந்த அதிர்ச்சிகரமான நெட்வொர்க்கை பஞ்சாப் போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். பஞ்சாபின் எல்லைப் பகுதியான பத்தான்கோட் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகே, சிசிடிவி கேமரா மூலம் ராணுவ நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுஜான்பூர் போலீசார் நடத்திய மின்னல் வேகச் சோதனையில், சக் தரிவால் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜித் சிங் என்ற பிட்டு என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்த சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை ரூட்டரைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிட்டுவிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிரடி உண்மைகள் வெளிவந்துள்ளன. துபாயில் உள்ள அடையாளம் தெரியாத ஒரு நபர் கொடுத்த அறிவுறுத்தலின்படி, இந்திய ராணுவக் கான்வாய்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தை லைவ்வாகக் கண்காணித்து பாகிஸ்தானுக்கு அனுப்ப, கடந்த ஜனவரி மாதம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராவை அவர் பொருத்தியுள்ளார். இந்தத் தேசவிரோதச் செயலுக்காக பிட்டுவுக்கு 40,000 ரூபாய் பணமும் கைமாறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விக்ரம்ஜித் சிங், பால்விந்தர் சிங் மற்றும் தரன்பிரீத் சிங் ஆகிய மேலும் மூன்று பேர் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பத்தான்கோட் சம்பவம் ஒருபுறமிருக்க, கடந்த மாதம் பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் கபுர்தலா ஆகிய இடங்களில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) பின்னணியுடன் இயங்கி வந்த இரண்டு மிகப் பெரிய ஹைடெக் உளவு முயற்சிகளையும் போலீசார் முறியடித்துள்ளனர். இவர்கள் ராணுவக் குடியிருப்புகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தளங்களுக்கு அருகில், சீன தயாரிப்பான சோலார் 4G சிம் கேமராக்களைக் கம்பங்களில் ரகசியமாகப் பொருத்தி உளவு பார்த்துள்ளனர். இந்தச் சீன கேமராக்கள் சூரிய ஒளி மற்றும் 4G சிம் மூலம் இயங்குவதால், அவற்றுக்குத் தனியாக மின்சார வயரிங் எதுவும் தேவையில்லை என்பதால் யாராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் மூலம் இந்திய ராணுவத்தின் அசைவுகள் அனைத்தையும் மொபைல் ஆப் வழியாகப் பாகிஸ்தானில் உள்ள ‘பௌஜி’ என்ற ஏஜெண்டுக்கு இவர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளனர். இந்த அதிநவீன கேமராக்களைப் பொருத்த பௌஜி 35,000 ரூபாய் கொடுத்துள்ளதுடன், ட்ரோன்கள் மூலம் எல்லை தாண்டி ஹெராயின் போதைப்பொருள் கடத்துவதிலும் இவர்களைப் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக பெரோஸ்பூரைச் சேர்ந்த சுக்விந்தர் சிங், சோனா மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லையில் இந்திய ராணுவத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சில துரோகிகளை வைத்து கோழைத்தனமாக உளவு பார்க்க முயல்வதையும், அதை இந்தியப் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடிப்பதையும் இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

Muthu Mani

Recent Posts

டி.கே.சிவக்குமாருக்கு பயமா..? மேகதாது அணைக்கு எதிராக.. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்..? கே.என்.நேரு காட்டம்..!

கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…

16 minutes ago

3,000 கி.மீ தூரம்… சீனாவில் இருந்து ஹைதராபாத்தில் ஆபரேஷன்..! இந்தியாவின் முதல் 5G ரோபோடிக் செய்த பிரம்மாண்ட மருத்துவம்.. வியக்க வைக்கும் சாதனை…!

சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…

18 minutes ago

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

35 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

37 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

38 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

54 minutes ago