நல்ல காரியங்கள் செய்யும்போது நல்ல நேரம் பார்த்து தான் செய்வது வழக்கம். அப்படி செய்தால்தான் தொடங்கும் காரியம் வெற்றி அடையும் என்பார்கள். எந்த காரியத்தையும் ராகு காலம் எமகண்ட காலத்தில் தொடங்கக்கூடாது என்று சொல்வார்கள் அது ஏன் தெரியுமா?
காலங்கள் நல்லதையும் செய்யும் கெட்டதையும் செய்யும். அதனால்தான் நல்லவைகள் என பிரித்து வைத்திருக்கிறார்கள். ராகுவும் கேதுவும் பாம்பு கிரகங்கள் ஆகும். அதனால் இதில் வரும் நேரங்கள் விஷ நேரங்கள் ஆகும். அதனால் இவை சுப காரியங்களுக்கு உகந்ததல்ல என்று ஒதுக்கி வைத்தனர்.
வாரம் என்பது ஏழு நாட்கள் ஆகும். ரிஷிகள் கிரகங்களுக்கு ஏழு நாட்கள் தந்தார்கள். ஆனால் நிழல் கிரகங்களுக்கான ராகு கேதுவுக்கு நாட்கள் தரமுடியவில்லை. அதனால் ராகு கேதுவுக்கு ஒரு நாளின் 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒதுக்கி பகிர்ந்து அளித்தார்கள்.
ராகு காலம் என்பது சிறப்பில்லை என கூறப்படுவதற்கான காரணம் ராகு கேது தலையும் உடலும் மாறி இருக்கும். இதை அரூபி என்பார்கள். அதனுடைய தன்மை நல்ல செயலை செய்ய விடாமல் நம் மதியை மயங்க வைத்து தடங்களை ஏற்படுத்தும். நம் மனம் சந்திரனை குறிப்பதால் ராகு எமகண்ட காலங்களில் அதன் தாக்கம் நல்லவையாக இருக்காது.
ராகு காலம் எமகண்டம் நேரத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது. பயணங்கள் கூடாது. புதுப்பொருட்கள் வாங்க கூடாது. கல்வி சம்பந்தப்பட்ட காரியங்களை தொடங்கக்கூடாது. புதிய பயிற்சி வகுப்பில் சேர்தல் போன்றவைகள் செய்யக்கூடாது. மருத்துவ சிகிச்சை செய்பவர்கள் இந்த நேரத்தில் முதன்முதலாக மருந்து உண்ண ஆரம்பிக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.