NEWS
கார் ரேஸிற்கும் நடிகை நிவேதா பெத்துராஜிற்கும் என்ன சம்மந்தம்… அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்…
நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர். தனது பதினோராவது வயதில் துபாய்க்கு தனது பெற்றோருடன் குடிபெயர்ந்து அங்கு தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர். 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா UAE என்ற போட்டியில் கலந்து கொண்டு முடி சூட்டப்பட்டவர். முதலில் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ் 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.
நிவேதா பெத்துராஜ் நடிகையாக மட்டுமல்லாமல் இவர் ஒரு பயிற்சி பெற்ற கார் ரேஸரும் ஆவார். தற்போது சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடந்து வருகிறது. இது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சையும் ஒன்று கிளம்பியுள்ளது. அது என்னவென்றால் ஃபார்முலா போர் கார் ரேஸ் நடைபெறுவதற்கு உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்ததற்கு காரணமே நிவேதா பெத்துராஜ் தான் என்று பலரும் பேசி வருகின்றனர்.
அத்துடன் சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் உடன் உதயநிதி ஸ்டாலினை வைத்து கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. துபாயில் அவர் வாங்கி இருக்கும் வீடு உதயநிதி ஸ்டாலின் தான் வாங்கி கொடுத்தது என்று செய்தி பரவி வந்தன. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நிவேதா பெத்துராஜ் காட்டமாக பதிவிட்டிருந்தார். நானும் உங்கள் வீட்டு பெண் மாதிரிதான். நாங்கள் அந்த மாதிரி குடும்பத்தை சார்ந்தவர்கள் அல்ல. இந்த வதந்திகள் எல்லாம் உண்மை அல்ல என்று கூறி மறுப்பு தெரிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது சென்னை பார்முலா 4 கார்பந்தயத்தில் நிவேதா பெத்துராஜ் கலந்துகொள்ள இருப்பதாக பலர் பேசி வருகின்றனர். ஆனால் இவை எதுவுமே உண்மை கிடையாது. ஃபார்முலா போர் கார் ரேஸில் கலந்து கொள்ளும் ரேசர்களின் முழுமையான பட்டியல் வெளியான நிலையில் இதில் நிவேதா பெத்துராஜ் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் நிவேதா பெத்துராஜ் கார் ரேசிங் சூட் உடன் இருக்கும் புகைப்படங்களை பயன்படுத்தியே அனைவரும் சம்பந்தப்படுத்தி பேசி வந்தனர்.
இதற்கு காரணம் என்னவென்றால் நிவேதா பெத்துராஜ் அடிப்படையில் ஒரு கார் ரேஸர். அவரது சமூக வலைத்தள பக்கங்களில் ஏற்கனவே அவர் கார் ரேசிங் சான்றிதழை பகிர்ந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா ரைஸ் கார்ப்பரேஷன் திட்டத்தின் முதலாவது லெவலை நிவேதா பெத்துராஜ் நிறைவு செய்துள்ளார். இவர் கார் ரேசர் என்பதால் கார் ரேஸிங் சூட் உடன் உள்ள புகைப்படங்கள் பலவற்றை அவர் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறார். ஆதலால் நிவேதா பெத்துராஜ்ஜுக்கும் சென்னையில் நடக்கும் பார்முலா கார் ரேஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது யாராலும் மறுக்க முடியாததாகும்.