‘ஈரமான ரோஜாவே 2’ வில்லி மாமியாரின் நிஜ வாழ்க்கையில இவ்வளவு கஷ்டமா?…. வைரலாகும் தகவல்!… ஷாக்கான ரசிகர்கள்!….

‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மீனா வேமுரி வாழ்க்கை பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டாக சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘ஈரமான ரோஜாவே 2’. இந்த சீரியல் தற்பொழுது டிஆர்பியிலும் முன்னிலையில் உள்ளது. இந்த சீரியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது சீரியல் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் வில்லி மாமியாராக நடித்து வருபவர் தான் நடிகை மீனா வேமுரி.
இவர் தற்பொழுது மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் இவரது கதாபாத்திரமே. இவர் தனது மருமகளான காவியாவை திட்டுவதால் மக்கள் இவரை வெறுத்து வருகின்றனர். இவரை சைலன்டான வில்லி என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். தற்பொழுது இவருடைய வாழ்க்கையை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும் இன்னொரு புறம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவர் சரளமாக தமிழ் பேசக் கூடியவர். நடிகை மீனா வேமுரிக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பட வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு டிமான்டிக் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை மீனா ‘நந்தினி’ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்பொழுது இவர் நிறைய தொடர்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து இவருக்கு ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது இவர் இந்த சீரியலில் வில்லி மாமியாராக கலக்கிக் கொண்டு வருகிறார்.