குஷியோ குஷி..! கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ₹6,000 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன் நிலுவை விவரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், விரைவில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், ஆவலும் அதிகரித்துள்ளது.