அடேங்கப்பா.. ஒரு மாசத்துக்கு இத்தனை ஆயிரமா..? பால் கணக்கு முதல் ஊர் சுத்துவது வரை VJ பார்வதியின் ஒரு மாச செலவு எவ்வளவு தெரியுமா..?

By Begam

Published on:

விஜே பார்வதி யூட்யூபில் மிகவும் பிரபலமானவர். ரேடியோ ஜாக்கி மற்றும் வீடியோ ஜாக்கியாக பணியாற்றிய விஜே பார்வதி மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகையாகவும் உள்ளார்.  இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் youtube வீடியோவில் பொது  இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

parvathi1

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜே பார்வதி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோ ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

   

டிவி நிகழ்ச்சி, யூடியூப் சேனல், பிரபலங்களின் இன்டெர்வியூ என கிடைக்கும் இடங்களில் தனது அசத்தலான பேச்சு திறனால் தமிழ் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார் விஜே பார்வதி. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க  கூடியவர். இவருக்கென சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்பொழுது இவர் தனது யூ டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது வரவு செலவு கணக்கு எழுதும் நோட் ஒன்றை காண்பித்து, அதில் தான் சம்பாதிக்கும் தொகைகளை காட்டாமல், செலவு கணக்கை மட்டும் காண்பித்துள்ளார். சமையல், பெட்ரோல், LIC என தனது சொந்த செலவுக்கு மட்டும் 75, 000 வரை செலவு செய்கிறாராம். தற்பொழுது அவர் வெளியிட்ட இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…