தயவு செய்து இப்படி பண்ணாதீங்க.. கடைசில மாப்பிள்ளை கிடைக்காமல் போயிட போகுது.. பதறி அடித்துக் கொண்டு வீடியோ வெளியிட்ட விஜே பார்வதி..!

By Mahalakshmi on மே 22, 2024

Spread the love

பிரபல தொகுப்பாளினியான விஜே பார்வதி தான் அதிகம் பேசுவதால் தனக்கு 28 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று வருத்தப்பட்டதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கின்றார். தமிழக இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த தொகுப்பாளினி விஜே பார்வதி.

   

கலாட்டா youtube சேனலில் ஜாக்கியாக பணியாற்றி வரும் இவர் விஜேவாக மட்டுமல்லாமல் மாடலிங் மட்டும் ஜோனலிஸ்ட் ஆகவும் இருக்கின்றார். தெருக்களில் நடந்து வரும் பொது மக்களிடம் கேள்விகளை கேட்டு பிரபலமான விஜே பார்வதி, தற்போது பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் விஜே பார்வதி.

   

 

இவருடைய இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலான பாலோவஸ்கள் இருக்கிறார்கள். அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜே பார்வதி பதிலளித்து வருவார், அது மட்டுமில்லாமல் இவருக்கு சுற்றுலா செல்வது மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி எந்த ஊருக்காவது சென்று வருவார். சமீபத்தில் கூட தாய்லாந்துக்கு சென்றிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் விஜே பார்வதி தான் மதுரை பொண்ணு, எனக்கு 28 வயதாகின்றது என் உறவினர்கள் எல்லாம் என் சோவை பார்த்துவிட்டு போன் பண்ணி என்ன இவ இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கா.. இப்படி பேசினா எப்படி மாப்பிள்ளை கிடைக்கும்னு சொன்னாங்க. இதனால தான் என்னவோ எனக்கு இன்னும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று பேசியிருந்தார்.

இதனை அவர் வருத்தமாக கூறியதாக எண்ணி பலரும் சோசியல் மீடியாவில் விஜே பார்வதிக்கு 28 வயதாகியும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டதாக கூறி செய்திகளை பரப்பி வந்தனர். இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவிஜே பார்வதி பேசியிருப்பது வைரலாகி வருகின்றது. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது நான் எதார்த்தமாகத்தான் அந்த பேட்டியில் கூறினேன்.

எப்போதும் நான் அதிகமாக பேசிக் கொண்டிருப்பதால் என்னவோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியிருந்தேன். இதை நான் என்னமோ வருத்தத்துடன் தெரிவித்ததாக இப்படி எல்லாம் கூறி வருகிறார்கள். என் மீது அக்கறை வைத்து என்னை விசாரித்தவர்களுக்கு மிக்க நன்றி. நான் அதிகம் யாருடனும் மிங்கலாக மாட்டேன். எனது ஃபிரண்ட்ஸ் கேங் ரொம்ப சின்னது, அதில் யாரையும் உள்ளேன் உடைய விடமாட்டேன்.

இதை பார்த்த பலரும் உனக்கு ஆட்டிட்யூட் அதிகம் என்று கூறுவார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலை கொள்வது இல்லை. எனக்கு புதிதாக இருக்கும் ஒருவருடன் மிங்கில் ஆவது என்பது மிகவும் கடினமான விஷயம், அப்படி இருக்கும் சமயத்தில் எனக்குப் பிடித்த ஒருவரை நான் சந்தித்து பின்னர் அவருடன் பேசி பழகி திருமணம் என்பதற்கு சிறிது காலமாகலாம். நீங்கள் இப்படி எல்லாம் போட்டுக் கொண்டிருந்தால் கட்டாயம் எனக்கு திருமணமே ஆகாது என்று விளக்கம் கொடுத்தார், மேலும் இதனை இத்தோடு நிறுத்திக் கொண்டு வேறு வேலை இருந்தால் போய் பாருங்கள் என்று கூறியிருந்தார்.