அனைவரும் வாங்கக்கூடிய பட்ஜெட் விலையில் Vivo தற்போது புதிய மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த புதிய மாடல் போன் Vivo Y29 5G ஸ்மார்ட்போன் ஆகும். இதன் விலை என்ன, என்னென்ன சிறப்பு சம்சங்களுடன் இது வருகிறது என்பதை பற்றி இனி காண்போம்.
இந்த Vivo Y29 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.68 இன்ச் LED டிஸ்ப்ளே ஆதரவுடன் வருகிறது. பெரிய டிஸ்ப்ளே உடன் வருவதால் இது பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 120 Hz ரெப்பிரேஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. Mediatek Dimensity 6,300 Funtouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 வசதியுடன் இந்த Vivo ஸ்மார்ட்போன் வெளிவந்து இருக்கிறது.
50MP பிரைமரி கேமரா பிளஸ் 0.8 எம்பி செகண்டரி கேமரா உடன் டூயல் ரியல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது மற்றும் எல்இடி பிளாஷ் கொண்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் இருக்கிறது. IP64 தர டஸ்ட் மட்டும் வாட்டர் ரெசிஸ்டன்ட் சைடு மௌண்டு ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆதரவும் இதில் இருக்கிறது. 5500mah பேட்டரி உடன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.
8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி ஆதரவை கொண்டு இந்த vivo ஸ்மார்ட்போன் வருகிறது. கூடுதலாக மெமரி வேண்டுமென்றால் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டில் மெமரி கார்டை போட்டு பயன்படுத்தலாம். இதில் 4 gb ram 128 ஜிபி மெமரி கொண்ட Vivo ஸ்மார்ட்போனின் விலை ரூ 13, 999 ஆக உள்ளது. 6ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் ரூ15,999 விலையிலும் 8ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் ரூ 16, 999 விலையும் 8gb ரேம் 256 gb மெமரி கொண்ட வேரியண்ட் ரூ 19,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.