விராட் கோலியின் ஒரு Instagram பதிவுக்கு இத்தனை கோடியா?… அனைவரையும் வியக்க வைக்கும் புள்ளி விவரம்..!

By Nanthini on ஆனி 29, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சமூக வலைத்தள பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக instagram பக்கத்தில் தினம்தோறும் ஏராளமானோர் புதுப்புது பதிவுகளை வெளியிடுகின்றன. இப்படியான நிலையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிடுவதற்கு அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 20 இடங்களில் ஒரே ஒரு இந்தியர் மட்டும்தான் இடம்பெற்றுள்ளார். விளையாட்டு வீரர்கள் தங்களது instagram பக்கத்தில் சில விளம்பர பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவார்கள். இதற்கு தனியாக அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். அதன்படி உலகில் அதிக மக்களால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

இவரை 65 கோடி ரசிகர்கள் instagram பக்கத்தில் பின் தொடரும் நிலையில் இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். விராட் கோலியை 27 கோடி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கின்றனர். இதன் மூலம் ஆசிய அளவில் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் வீரராக விராட் கோலி உள்ளார். அதே சமயம் இந்திய வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஒரு பதிவுக்கு பதினோரு கோடியை 85 லட்சம் ரூபாயை ஒரு விளம்பரத்திற்கான சம்பளமாக பெறுகின்றார். தற்போது இந்தச் செய்தி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.