அடடே இத யாருமே எதிர்பார்க்கலையே.. வெற்றிமாறனுடன் இணைந்த நடிகர் விமல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

By Priya Ram

Published on:

பிரபல நடிகர் ஆனவர்கள் பசங்க திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு களவாணி படம் விமலுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

   

இதனை தொடர்ந்து தூங்கா நகரம், எத்தன், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களில் விமல் நடித்துள்ளார். நடிகர் போஸ் வெங்கட் கன்னிமாடம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட் நடிகர் விமலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திற்கு மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்டுள்ளது.

அதனை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் படத்தின் வெளியீட்டுப் பொறுப்பில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Priya Ram