பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக சதா நடித்தார். தமிழ் தெலுங்கு என் இரண்டு மொழிகளில் அந்நியன் படம் உருவானது. அதன் பிறகு பிரெஞ்சு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
பிரெஞ்சு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பிரான்சில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படம் அந்நியன் படம் தான். பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்நியன் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 26. 38 கோடி ரூபாய் செலவானது. முதலில் சாதுவாக இருக்கும் விக்ரம் அந்நியனாக மாறி தவறு செய்யும் நபர்களை கருட புராணத்தின் படி தண்டிக்கிறார். இதுதான் படத்தின் மையக்கதை. இந்த படத்தில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கும்.
ஆனால் படத்தில் ஒரு சில மிஸ்டேக் இருப்பதை நீங்கள் கவனிச்சிருக்கீங்களா? விக்ரம் குளித்து கொண்டிருக்கும் போது அம்மா அப்பாவிடம் புலம்புவார். அப்போது விக்ரம் நெற்றியில் நாமம் அழிஞ்சி இருக்கும். ஆனால் குளிச்சி முடிச்சு அறைக்கு வரும் போது மறுபடியும் நாமம் இருக்கிற மாதிரி காமிச்சி இருப்பாங்க. அடுத்ததாக விக்ரம் சதாவை பார்க்க வீட்டுக்குள் வரும்போது செருப்பு போட்டு இருப்பார். பார்த்துட்டு வெளியே வந்து வண்டி எடுக்கும்போது செருப்பு தான் போட்டு இருப்பார்.
ஆனால் சாலையில் போகும் போது ஷூ போட்டு இருப்பார். இதனையடுத்து விக்ரம் கையை அடிச்சி உடைச்சிருப்பாங்க. அதனால் கையில் கட்டு போட்டு இருப்பார். அடுத்த சீனில் கையில் கட்டு இல்லாமல் சதா கூட ரெஜிஸ்டர் ஆபீஸ் போகுற மாதிரி காமிச்சிருப்பார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் ரயிலில் விக்ரம் சதா பக்கத்தில் உட்கார்ந்து ஒருத்தர் தண்ணி அடிப்பாரு. அவர் வேற யாரும் இல்ல. விக்ரம் சின்ன வயசுல இருக்கப்போ தண்ணி அடித்து விட்டு பணி செய்யாத மின்வாரிய ஊழியர் தான்.