பிரபல இயக்குனரான விக்ரமன் கடந்த 1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கோகுலம், பூவே உனக்காக, சூரிய வம்சம், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, மரியாதை உள்ளிட்ட படங்களை விக்ரமன் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் விக்ரமன் அளித்த பேட்டியில் கூறியதாவது, சூரிய வம்சம் படத்தின் இரண்டாவது பாகம் எடுத்துச் சொல்லி பல தயாரிப்பாளர்கள் என் வீட்டிற்கு வந்து பேசினாங்க. சவுத்ரி, சரத்குமார் ஆகியோர் சூரிய வம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை பண்ணலாம் என சொன்னாங்க. எனக்கு அந்த Part 2 கல்ச்சர்ல உடன்பாடு இல்லை.
கரெக்டான ஸ்கிரிப்ட் அமையனும். முதல் பாகத்தோட கன்டினியூசன் சரியா இருக்கணும். சூரியவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எனக்கு தோணல. ஆனால் உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆசைப்பட்டு இருக்கேன். படம் பிகினிங்கில் இருந்து எண்டு வரைக்கும் ஃபுல் காமெடியா இருக்கணும். சந்தானத்தை வைத்து உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்து இருக்கேன்.
அப்படி எடுத்தா அது ஒரு நல்ல காமெடி படமாக அமையும். ஒரு லாட்ஜை சந்தானம் நடத்தினால் எப்படி இருக்கும். மற்ற டுபாக்கூர் கேரக்டர் பாகவதர், லேகியம் விக்கிறவர், ரியல் எஸ்டேட் நடத்துறவரு இவங்க எல்லாத்தையும் வச்சு ஒரு பெரிய காமெடி படம் எடுக்கணும்னு ஆசை இருக்கு என பேசி உள்ளார். சூர்யா நடிப்பில் ரிலீசான உன்னை நினைத்து படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கதாகும்.