விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். எஸ் யு அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரஜ் வெஞ்சார மூடும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திலிருந்து வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் இரண்டாவது பாகம் தற்போது வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என தெரிகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் மார்ச் இன்று வெளியாக உள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் என விஜய் சேதுபதியை வைத்து வரிசையாக படங்களை இயக்கி வந்த இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அந்த படத்தை பார்த்து ஆடிப்போன சியான் விக்ரம் உடனடியாக தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். வீர தீர சூரன் படத்தை 2 பாகங்களாக உருவாக்க முடிவு செய்த அருண் குமார் முதலாவதாக 2ஆம் பாகத்தை இன்று வெளியிட போவதாக அறிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக வீரதீரசூரன் இன்று காலை 10.30 மணிக்கு ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீரசோழன் படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க சியான் விக்ரம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்.
இப்படியான நிலையில் விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் போஸ்ட் முதல் விமர்சனமாக மாறியுள்ளது. இன்று வெளியாக உள்ள வீரதீரசூரன் படத்தை பார்த்து விட்ட இட்லி கடை மற்றும் பராசக்தி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “வீர தீர சூரன் வாவ் தூள்” என்று தனது முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். இது விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Veera Dheera Sooran woww தூள்💥💥💥🔥🔥🔥🔥🧨🧨🧨🧨🧨
— Aakash baskaran (@AakashBaskaran) March 26, 2025