சொந்த ஊரில் மிகப்பெரிய வீட்டை கட்டிய விஜய் டிவி தீனா…. இணையத்தில் வைரலாகும் கிரகப்பிரவேச புகைப்படங்கள்….!!!!

சொந்த ஊரில் மிகப்பெரிய வீட்டை கட்டிய விஜய் டிவி தீனா…. இணையத்தில் வைரலாகும் கிரகப்பிரவேச புகைப்படங்கள்….!!!!

விஜய் டிவியில் காமெடியன்களாக அறிமுகமாகி தற்போது சினிமாவில் நுழைந்துள்ள பிரபலங்கள் பலரும் உள்ளனர்.

அவ்வகையில் விஜய் டிவியில் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தீனா.இவர் தற்போது சினிமாவில் நுழைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியாக அறிமுகமானவர்தான் தீனா.

தன்னுடைய இயல்பான காமெடி மூலமாக ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.

தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் பா பாண்டி,கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் தற்போது நடித்து வருகின்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படிப்படியாக தன்னை மெருகேற்றிக் கொண்ட இவர் தற்போது திரைப்படங்களில் பிஸியான நடிகராக நடித்து வருகின்றார்.

இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு தனக்கு மிகுந்த ஆசை எனவும் கூறியுள்ளார்.

இவருக்கென இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவே பிசியாக நடித்து வந்தாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் தற்போதும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தீனா புதிய வீடு ஒன்றைக் கட்டி கிரகப்பிரவேசம் செய்து உள்ளார். தன்னுடைய உழைப்பால் சொந்த ஊரில் மிகப் பெரிய வீடு ஒன்றை அவர் கட்டியுள்ளார்.

அதன் கிரகப்பிரவேசம் நடைபெற்ற புகைப்படங்களை தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அவருக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவர் புது வீட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana