தந்தையின் ஹிட் படத்திற்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய விஜயின் மகன்!… என்ன சொன்னாருன்னு தெரியுமா?… வைரலாகும் தகவல் இதோ!…

தந்தையின் ஹிட் படத்திற்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய விஜயின் மகன்!… என்ன சொன்னாருன்னு தெரியுமா?… வைரலாகும் தகவல் இதோ!…

நடிகர் விஜயின் ஹிட் படத்திற்காக அவரது மகன் வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு போட்டியாக தல அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் வெளியாகிவுள்ளது.

வாரிசு திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வைரலானது. இதைத் தொடர்ந்து படத்தின் பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார்.

நடிகர் விஜய் நடித்த ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘நண்பன்’. இத்திரைப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன் ஆகியோர் சில காட்சிகளில் தனது பேண்டை கழற்றி தலைவா ‘யு ஆர் கிரேட்’ என்று கூறுவார்கள்.

அதே போல நண்பன் படத்தை பார்த்துவிட்டு விஜயின் மகன் ஜேசன் விஜய், தன் அப்பாவை பார்த்து பேண்ட்டை கழற்றி ‘தலைவா’ என்று கூறி  வாழ்த்தினாராம்.  இப்படி வித்தியாசமான முறையில் நடிகர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் அவரது மகன் ஜேசன். தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam