‘ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லி டா’…. ரீ ரிலீஸ் ஆகும் விஜயின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான கில்லி.. எப்ப தெரியுமா..?

By Ranjith Kumar

Published on:

2004 ஆம் ஆண்டு ரிலீசான கில்லி படம் தமிழ் திரையுலகையே ஒரு படி மேலே எடுத்துச் சென்றது என்று கூறலாம், அப்படம் பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பி ஓடி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, அந்த சமயத்தில் கில்லி படம் தளபதி விஜய் அவர்களுக்கு கரியர் மேக்கிங் படமாகவே அமைந்தது, தளபதி விஜய் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம்.

இப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் ஒப்பு டு என்ற தலைப்பில் வெளியாகிய சக்க போடு போட்டது, தெலுங்கில் நீ படம் திரையரங்கை தெறிக்க விட்டு ஓடியது அதைத் தொடர்ந்து தமிழில் இப்படத்தை தரணி அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய் திரிஷா, பிரகாஷ் ராஜ் அவர்கள் நடிப்பில் வித்யாசாகர் இசையமைப்பில் உருவாகிய இப்படம் பெரும் அளவில் பேசப்பட்டு ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தது, இப்படத்திற்கு பிரகாஷ்ராஜ் வில்லனாக கிடைத்தது பெரும் வரப் பிரசாதம் என்று கூறலாம் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் அவர்கள் “செல்லம் I Love you” என்ற வசனம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது, இப்ப வரையிலும் ரசிகர்கள் பிரகாஷ்ராஜை பார்த்தால் தோன்று முதல் டயலாக் இதுவாகத்தான் இருக்கும்.

   
<span style=font size inherit text align justify>இதில் பிரகாஷ்ராஜ் தத்ரூபமாகவும் மிக மிரட்டல் ஆகவும் நடித்து இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இவரும் ஒரு ஆளாகத்தான் இருந்தார் சொல்லப் போனால் ரசிகர்கள் அனைவரும் வேலு தனலட்சுமி கெமிஸ்ட்ரியை விட தனலட்சுமி மேல் வைத்திருக்கும் முத்துப்பாண்டியன் காதலை கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள் இப்போது வரை அவர்கள் காதலை பற்றி தான் சமூக வலைத்தளத்தில் பெருதளவும் பேசப்பட்டு வருகிறது அப்படி இருந்தது பிரகாஷ்ராஜ் நடிப்புஇப்படத்தின் இசைய ரசிகர்கள் அனைவரையும் இசையாலே நினைத்திருப்பார் வித்யாசாகர் இவர் இசையமைத்துள்ள ஒவ்வொரு பாடலும் மிகவும் தனித்துவமாகவும் பிரமாதமாகவும் அமைந்திருக்கும் சொல்லப்போனால் கொக்கர கொக்கரக்கோ பாடலைக் கேட்டால் குழந்தை கூட ஆடாமல் இருக்காது அப்படி போடு என்ற பாடலை போட்டு தாக்கியுள்ளார் விஜய் வரும் ஒவ்வொரு போசனிலும் பின்னணி மியூசிக் பின்னி எடுத்து இருப்பாரு வித்தியாசாகர்<span>

இப்ப வரை காரில் ட்ரிப்புக்கு செல்லும் ஒவ்வொருவரும் “அர்ஜுனலு வில்லு அரிச்சந்திர சொல்லு” பாடலை கேட்காமல் போகவே மாட்டார்கள். இப்படத்தில் ஒவ்வொரு பாடலும் வித்தியாசங்கள் செதுக்கியிருப்பார் என்றே கூறலாம்.
கூடிய கூட்டணியில் அமைந்த கில்லி படம் போல் வேறு படம் இவர்களாலே கொடுக்க முடியாது என்ற அளவுக்கு ரசிகர்கள் அப்பட்டத்தை கொண்டாடி வருகிறார்கள், இப்படத்தைப் போல தான் கொடுக்க முடியாது என்றாலும் இப்படத்தையே மறுபடியும் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுக்கலாம் என்று இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள், வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தை தொலைக்காட்சியில் போட்டால் சலிக்காமல் உட்கார்ந்து பார்க்கும் ரசிகர் கூட்டத்திற்கு, மீண்டும் திரையரங்குகளுக்கு படம் ரிலீஸ் செய்வதது பெரும் கொண்டாட்டமாக உள்ளது, இப்படம் திரையரங்குக்கு மீண்டும் வருவதை கண்டு ரசிகர்கள் பெரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar