இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை…. கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கம்…. வைரலாகும் புகைப்படங்கள்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை…. கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கம்…. வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது விஜய்யுடன் தளபதி 67 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அறிவிப்பாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் மீதமுள்ள நட்சத்திரங்களின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பல நடிகர்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனிடையே காஷ்மீரின் தற்போது லியோ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது பட குழு அப்டேட்டுகளை வெளியிட்ட விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு நன்றி தெரிவித்து அவருடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் லியோ படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத் தெரிவித்த வாழ்த்துக்கள் நன்றி என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை விஜய் மக்கள் இயக்கத்தினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Archana