தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் தனித்து தான் போட்டி என சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கி வரும் தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சமீபத்தில் அறிவித்துள்ள தனித்துப் போட்டியிடும் முடிவு மாநில அரசியல் கணக்குகளை முற்றிலும் மாற்றப்போகிறது. தமிழக வெற்றி கழகம் தனித்து களமிறங்குவது திமுகவின் வாக்குகளை காட்டிலும் அதிமுகவுக்கு வாக்கு அடிப்படையில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. கடந்த சில வருடங்களில் அதிமுக வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்ட மனச்சோர்வு, புதிய மாற்றத்திற்கான ஆர்வம் ஆகியவை விஜய்க்கு ஆதரவாக மாறும் என தெரிகிறது.
இதனால் பல தொகுதிகளில் ஏற்படும் வாக்கு பிளவால் திமுக மீண்டும் பல்வேறு இடங்களில் வெற்றி பெறும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அதே சமயம் தமிழக வெற்றிக்கழகம் முதன்முறையாக போட்டியிடும் நிலையில் மக்கள் மனநிலை மற்றும் விஜயின் ரசிகர் தாக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான சாத்திய கூறுகளும் அதிகம். இப்படியான சூழலில் திமுகவும் அதிமுகவும் தங்கள் வாக்கு வங்கியை குறையாத வகையில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் புதிய திட்டங்களை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
விஜய் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவது திமுகவுக்கு சாதகமாக மாறி உள்ளது. ஏனென்றால் விஜய் பலமாக உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் தற்போது தனித்துப் போட்டியிடுவது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர திமுகவின் வாக்குகளை சரிய விடாது என்று ஸ்டாலின் கணக்கு போட்டு உள்ளாராம்.
இந்தியாவில் டிஜிட்டல் கடன் வழங்கல் வேகமாக வளர்ந்தாலும், மோசடி ஆபத்தும் அதிகரித்துள்ளது. போலி செயலிகள், குறுஞ்செய்திகள், அபத்தமான சலுகைகள் மூலம்…
நேற்று நடைபெற்ற போர்ச்சுகல்லின் FIFA உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சை சைகையை கிளப்பினார். அதாவது…
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே,…
பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள்…
வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், செல்வம், கோபத்தைக் குறிக்கும். டிசம்பரில் செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுவதால் சில…
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். கைகளை சுழற்றி, முன், பின், பக்கவாட்டு நடை போன்ற மாற்றங்களைச்…