பிரபல நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவரது மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபரின் மகள் கீர்த்தனா என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு நிச்சயம் நடைபெற்றது. அந்த விஷயத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றனர்.
திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தின் உடல்நலம் மோசமானதால் அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விஜய பிரபாகரனின் திருமணம் தள்ளிக்கொண்டே போனது. மேலும் தனது மகனின் திருமணம் பிரதமர் மோடியின் முன்னிலையில் நடக்க வேண்டும் என விஜயகாந்த் ஆசைப்பட்டாராம். இதனால் திருமணம் தள்ளிப்போனது.
சமீபத்தில் விஜய பிரபாகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, கல்யாணம் பார்த்தீங்கன்னா அது அமையனும். நான் பண்ண மாட்டேன்னு எதுவுமே சொன்னதில்லை. அது நடக்கணும். அப்பா இருந்திருந்தால் உண்மையாவே நான் சந்தோசமா இருந்திருப்பேன். இடையில் கூட பண்ணலாம்னு நினைச்சு இருந்தப்போ அப்பாக்கு உடம்பு சரியில்ல. ஒரு சில காரணங்களால் கல்யாணம் தள்ளிகிட்டே போனது. அது என்னன்னு பாக்கணும். அப்பா இல்லாதது உண்மையிலே வருத்தம் தான்.
அப்பா இருக்கப்பவே நடந்தா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும். அது எப்ப நடக்குமோ அப்பதான் நடக்கும். நான் பிடிவாதமா பண்ணி கல்யாணம் பண்ணுங்க அப்படின்னு நான் சொன்னது இல்ல. நான் பாட்டுக்கு ஃப்ரீயா இருக்கேன். நான் ஹேப்பியா இருக்கேன். கல்யாணம் நடக்கனும்னா பண்ணிக்கிறேன். வேண்டாம் பண்ண மாட்டேன்னு முரண்டு பிடிக்கல. அமைந்ததுனா பண்ணிக்க போறேன். அப்பா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். இப்போதைக்கு சிங்கிளா ஜாலியா போய்கிட்டு இருக்கு என பேசி உள்ளார்.