கர்நாடகாவிடமிருந்து தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கர்நாடகாவுக்குச் செல்ல வேண்டும் எனத் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜயபிரபாகரன் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “’ஓடு.. ஓடு.. ஓடு.. வேட்டைக்காரன் வர்றான்’ என்று படப் பாடலில் பாடியது போல, விஜய்யும் அவரது கட்சியினரும் கர்நாடகாவுக்கு ஓடிச் சென்று தமிழக உரிமையான தண்ணீருக்காக வேட்டையாடித் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்; எனக்கு உயிர் முக்கியமல்ல, தமிழகத்தின் நலனே முக்கியம் என்றால் அதைச் செயலில் காட்ட வேண்டும்” என்று நேரடியாகவே சவால் விடுத்து விமர்சித்துள்ளார்.
