Connect with us

என்னப்பா சொல்றீங்க…? ஆக்ஷன் கிங் அர்ஜுன் தமிழ் சினிமாவுக்கு வர கேப்டன் விஜயகாந்த் தான் காரணமா..?

CINEMA

என்னப்பா சொல்றீங்க…? ஆக்ஷன் கிங் அர்ஜுன் தமிழ் சினிமாவுக்கு வர கேப்டன் விஜயகாந்த் தான் காரணமா..?

 

ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என அன்புடன் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயின் லியோ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்த முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார். அர்ஜுன் நடித்த சுதந்திரம், ஜெய்ஹிந்த், ஜென்டில் மேன், ஏழுமலை, மருதமலை உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.ஆக்ஷன் கிங் அர்ஜுன் கடந்த 1984-ஆம் ஆண்டு ரிலீசான நன்றி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக கார்த்திக், உலகில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார்.

   

AVM ராஜாவும், புஷ்பலதாவும் இணைந்து நன்றி படத்தை தயாரித்தனர். இந்த படத்தில் கார்த்திக் நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட் கன்னட திரைப்படமான தாலியா பாக்கியா படத்தை தமிழில் நன்றி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். முதலில் இந்த படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் கேப்டன் விஜயகாந்த் தான் அழகினார்களாம். ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் அதிக சம்பளம் கேட்டதாக தெரிகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனத்தினர் அந்த படத்தில் நடித்த ஹீரோவை ஏன் தமிழ் படத்தில் நடிக்க வைக்க கூடாது என நினைத்து அர்ஜுனை தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

அதன் மூலம் தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு விஜயகாந்த் பாதை அமைத்துக் கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தகவலை பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

author avatar
Archana
Continue Reading
To Top