பிக் பாஸ் பிரபலத்தை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை!!… வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!… குவியும் வாழ்த்துக்கள்!…

பிக் பாஸ் பிரபலத்தை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை!!… வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!… குவியும் வாழ்த்துக்கள்!…

விஜய் டிவி சீரியல் நடிகையான தேஜஸ்வினி கவுடாவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை தேஜஸ்வினி கவுடா. இவர் 2018ல் வீணா பொன்னப்பாவுடன் ‘பில் ஹிந்தி’ என்கிற கன்னட சீரியல் மூலமாகத்தான் முதன் முதலில் தொலைக்காட்சி நடிகையாக அறிமுகம் ஆனார்.

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாக வரும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பிரபலம் தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தேஜஸ்வினி கவுடா. இந்த தொடரில் அவர் நடிகர் வினோத் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சி சீரியலின் மூலம் பிரபலமானார். இந்த சீரியலின் மூலம் கிடைத்த பிரபலத்தை கொண்டு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘வித்யா நம்பர் ஒன்’ என்ற சீரியலில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாக ஓடி கொண்டுள்ளது.

இந்நிலையில் நடிகை தேஜஸ்வினி கவுடா கன்னடா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமர்தீப் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. தற்பொழுது நடிகை தேஜஸ்வினி கவுடா அமர்தீப் தம்பதியினரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam