விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தின் பத்தாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய இவர் அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார். ஒரு வருடத்திற்கு இவரின் திரைப்படங்கள் பல ரிலீசாகி வந்தது.
இதில் வெற்றி தோல்வி என மாறி மாறி சந்தித்து வந்த விஜய் சேதுபதி அதன் பிறகு கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த இவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாகவும், விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாகவும் நடித்தார் .
ஒரு படி மேலே சென்று ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்த அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கும் விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுதான் மகாராஜா . இந்த திரைப்படம் இவருக்கு சிறந்த கம்பேகாக இருந்தது. திரையரங்குகளில் இவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருந்த மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருடன் மம்தா மோகன்தாஸ், நட்டி என்கின்ற நடராஜ், அபிராமி, திவ்யபாரதி, முனீஸ்காந்த், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியானது முதலில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற காரணத்தினால் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. முதல் நாளிலேயே இந்த திரைப்படம் ஐந்து கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அடுத்து 7 கோடி ரூபாய், மூன்றாம் நாளில் 15 கோடி என மிகப்பெரிய வசூலை சந்தித்தது.
தற்போது திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம் இதுவரை உலக அளவில் 81.8 கோடி ரூபாய்க்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. கூடிய விரைவில் 100 கோடி ரூபாயை தொடும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதை பார்த்த பலரும் இந்த வருடத்திலேயே வெளியான தமிழ் திரைப்படங்களில் அரண்மனை 4 மட்டும்தான் 100 கோடி ரூபாயை வசூல் செய்திருந்த நிலையில் அதன் வெற்றியை மகாராஜா திரைப்படம் முறியடிக்கும் என்று கூறி வருகிறார்கள்.